ரொம்பா சுவையாக இருக்கும் இந்த வெங்காய மஞ்சூரியன இப்படி செஞ்சு பாருங்க.
3 பேரிய வெங்காயம்
உப்பு
மிளகாய் பொடி 1 டீஸ் பூன்
கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி
கால் டீஸ்பூன் கரம் மசாலா
3 டீஸ் பூன் கான்பிளவர் மாவு
2 அரை டீஸ்பூன் அளவுக்கு மைதா மாவு
தண்ணீர்
பூண்டு
எண்ணெய்
குடைமிளகாய்
சோயா சாஸ்
தக்காளி சாஸ்
தனியா பொடி
பூண்டு
செய்முறை: வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதில் மஞ்சள்பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, கான்பிளவர் பொடி ஆகியவற்றை சேர்க்கவும். மைதா மாவு சேர்க்கவும். கடைசியாக உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசையவும். இந்நிலையில் 15 நிமிடங்கள் கழித்து, சிறு உருண்டைகளாக்கி எண்ணெய்யில் பொறித்து எடுத்துகொள்ளுங்கள். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் சிறுது எண்ணெய் ஊற்றி, அதில் பூண்டி தட்டி போடவும், தொடர்ந்து வெங்காயம் சேர்க்கவும், அதில் மல்லி பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும் தொடர்ந்து சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். தொடர்ந்து அதில் பொறித்த வெங்காய உருண்டைகளை சேர்த்து வதக்கவும். சூப்பரான வெங்காய மஞ்சூரியன் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“