வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்நாக்ஸ் செய்ய ஆசைப்படுகிறீர்களா? வீட்டில் வெங்காயம் இருக்கா அதை வைத்து ஈஸியான ஸ்நாக்ஸ் செய்து விடலாம். எல்லோருக்கும் பிடிக்கும் வெறும் வெங்காயத்தை வைத்து ஒரு லைட்டான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் வெங்காய பக்கோடா செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு- 3 கப்
அரிசி மாவு- அரைகப்
தனி மிளகாய்பொடி -2 ஸ்பூன்
சீரகப்பொடி- அரைஸ்பூன்
பெருங்காயப்பொடி- அரைடீஸ்பூன்
உப்பு
பெரிய வெங்காயம்- 3
காஷ்மீர்சில்லிபொடி- 1ஸ்பூன்
எண்ணெய்
செய்முறை
முதலில் வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். பின் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, 2ஸ்பூன் எண்ணெய் மிளகாய்தூள்,பெருங்காயம், சீரகத்தூள், காஷ்மீர் மிளகாய்தூள் சேர்த்துக் கலக்கவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். தண்ணீர் நிறைய சேர்க்க கூடாது. வெங்காயம் மேல் மாவு நன்கு ஒட்டி இருக்க வேண்டும். தேவைப்பட்டால் கீரை வகைகளை சேர்த்து கொள்ளலாம். சுவையும் இருக்கும் சத்தாகவும் இருக்கும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடு ஆனதும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உதிர்த்தது போல் போடவும். நன்கு சிவந்து வந்ததும் எடுத்து சாப்பிட ஆரம்பிக்கலாம். சுவையாக இருக்கும்.