இட்லி, தோசை, பணியாரம் வழக்கமாக காலை அல்லது இரவில் சாப்பிடுவோம். இதற்கு குழம்பு, தேங்காய் சட்னி செய்து சாப்பிடுவோம். எப்போதும் ஒரே மாதிரியாக சாப்பிடாமல், வேறு ரெசிபி ஏதாவது சைட் டிஷ் செய்து சாப்பிட நினைத்திருப்போம். அந்தவகையில் வேர்க்கடலை கார சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க. கடலை இருப்பதால் மணமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய் – 6
வெங்காயம் – 2
தக்காளி – 2
புளி
வறுத்த வேர்க்கடலை தோல் உரித்தது – 3 கைப்பிடி
கடுகு, வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், உளுத்தம்பருப்பு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் மிளகாய், நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு,
தக்காளி சேர்த்து வதக்கவும்.
அடுத்து சிறு புளி, வேர்க்கடலை போட்டு 2 நிமிடம் வதக்கவும். இப்போது, அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆற விட்டு மிக்ஸியில் கலவையை சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஊற்றி அரைக்கவும். அரைத்த சட்னியை வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். வேர்க்கடலை
இருப்பதால் சட்னி திக்காக இருக்கும். வேண்டுமென்றால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கலாம்.
இப்போது, ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், உளுத்தம்பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து சட்னியில் சேர்க்கவும். அவ்வளவு தான், சுவையான வேர்க்கடலை கார சட்னி ரெடி. இட்லி, தோசை, பணியாரத்திற்கு சைட் டிஷ்யாக சேர்த்து சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil