வெங்காயம் மிக முக்கிய உணவுப் பொருள் ஆகும். சாம்பார் முதல் சிக்கன் வெரைட்டி வரை அனைத்திற்கும் வெங்காயம் முக்கிய பொருளாக சேர்ப்போம். இதில் உணவிற்கு சுவை, ஆரோக்கியத்தை கூட்டும். அந்த வகையில் வெங்காயம் வைத்து இட்லி, தோசைக்கு சுவையான துவையல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 200 கிராம்
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி உரித்து வைக்கவும். காய்ந்த மிளகாய் நறுக்கி எடுத்து கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், தனித்தனியா போட்டு வதக்கவும். அடுத்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். பிறகு, எல்லாவற்றையும் சேர்த்து உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போது ருசியான வெங்காய துவையல் ரெடி. இந்த துவையலை இட்லி, தோசை, சப்பாத்திக்கு வைத்து சாப்பிடலாம். சூடான சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil