குறிப்பாக ஆரஞ்சு என்றாலே அதில் இனிப்பு இருக்கிறது இதனால் இதை தவிர்க்க வேண்டும் என்று கூறுவோம். சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா? என்ற குழப்பம் ஏற்படும்.
இந்நிலையில் 100 கிராம் ஆரஞ்சில் , 52 கலோரிகள், தண்ணீர் சத்து 86.7 கிராம், 11.8 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் நார்சத்து, 43 மில்லி கிராம் கால்சியம் , 166 மில்லி கிராம் பொட்டாஷியம், 59 மில்லி கிராம் வைட்டமின் சி, 10 மில்லி கிராம் மெக்னீஷியம், பாஸ்பரஸ் 23 மில்லி கிராம், சோடியம் 9 மில்லி கிராம் உள்ளது.

சர்க்கரை நோயாளிகளும் ஆரஞ்சு சாப்பிடலாம். குறைந்த சர்க்கரை அளவு மற்றும் நார்சத்து இருப்பதால் ரத்த சர்க்கரை அளவு குறையும்.
இதிலிருக்கும் நார்சத்து ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். இதனால் நம் உடல் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்-யை குறைவாக உருஞ்சிக்கொள்ள உதவுகிறது.
இதில் இருக்கும் பொட்டாஷியம், உடலில் உள்ள அதிக சோடியத்தை குறைக்கும். உடலில் உள்ள அதிக சோடியம், இதய நோய், சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.
இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் இருப்பதால் அனைவரும் சாப்பிடலாம். வைட்டமின் சி மற்றும் அஸ்கார்பிக் அசிட் இதய நோய் வராமல் தடுக்கும்.

இந்நிலையில் நமது உடல் இன்சுலினை ஏற்றுக்கொள்ளும் தன்மை குறைவதும் ,சர்க்கரை நோய் உருவாக காரணம். இந்நிலையில் ஆரஞ்சு சாப்பிடுவதால் உடல் இன்சுலினை ஏற்றுக்கொள்ளும். இதில் இருக்கும் போலேட் இதற்கு உதவுகிறது. கூடுதலாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.