சுவையான பால் பணியாரம் வீட்டில் எப்படி செய்வது என்பதை பாருங்கள்.
தேவையான பொருள்கள்
பச்சரிசி - 1 ஆழாக்கு
உளுந்தம் பருப்பு - முக்கால் கிண்ணம்
உப்பு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - அரை கிலோ
சர்க்கரை - முக்கால் ஆழாக்கு
தேங்காய் - 1
எப்படி செய்வது?
அரிசி, உளுந்தம் பருப்பு இரண்டையும் சேர்த்துக் களைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இட்லி மாவு பதத்துக்கு கெட்டியாக நைசாக அரைத்து உப்பு சேர்க்கவும்.
தேங்காயைத் துருவி 2 ஆழாக்குப் பால் எடுத்து, அதில் சர்க்கரையைக் கலக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை சிறிய உருண்டையாக எடுத்துப் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
பொரித்து எடுத்த பணியாரத்தை தேங்காய்ப் பாலில் போட்டு ஊறவைத்து பரிமாறவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“