ஒரு கைப்பிடி அரிசி, 3 கப் பால்... செஃப் தாமு ஸ்டைலில் இப்படி பால் பாயாசம் பண்ணுங்க!
இலையில் உணவு வகைகளை அடுக்கி வைக்கும் நாம், இந்த டேஸ்டியான பால் பாயாசத்தையும் அவற்றின் வரிசையில் சேர்க்கலாம். இந்த சுவையான பால் பாயாசத்தை செஃப் தாமு ஸ்டைலில் தயார் செய்ய இங்கு சிம்பிள் டிப்ஸ்களை பார்க்கலாம்.
பண்டிகை காலங்களில் பயணித்து வரும் நாம், இந்த நாட்களை நம்முடைய அன்புக்குரியவர்களுடன் கொண்டாடி மகிழ்வோம். இந்த கொண்டாட்டங்களின் போது சுவையான மற்றும் வித்தியாசமான உணவுகளை தயார் செய்து அவர்களை குஷிப்படுத்துவோம். அந்த வகையில், நம்முடைய பண்டிகை கொண்டாட்டங்களில் நிச்சயம் இந்த இனிப்பு வகையை நிச்சயம் முயற்சித்துப் பாருங்கள்.
Advertisment
இலையில் உணவு வகைகளை அடுக்கி வைக்கும் நாம், இந்த டேஸ்டியான பால் பாயாசத்தையும் அவற்றின் வரிசையில் சேர்க்கலாம். இந்த சுவையான பால் பாயாசத்தை செஃப் தாமு ஸ்டைலில் தயார் செய்ய இங்கு சிம்பிள் டிப்ஸ்களை பார்க்கலாம்.
செஃப் தாமு ஸ்டைலில் பால் பாயாசம் - தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - ஒரு கைப்பிடி பால் - 3 கப் தண்ணீர் - 1/2 கப் வெள்ளை சர்க்கரை - 1 கப் நெய் - 1 குழிக் கரண்டி முந்திரி உலர்ந்த திராட்சை பாதம் பருப்பு குங்கும பூ அல்லது ஏலக்காய் பொடி
செஃப் தாமு ஸ்டைலில் பால் பாயாசம் - நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் அல்லது பாத்திரம் வைக்கவும். பிறகு அதில் நெய் விடவும். தொடர்ந்து, தண்ணீரில் நன்கு அலசி எடுத்த அரிசியை சேர்க்கவும். இவற்றை ஒரு கரண்டியால் வதக்கி தண்ணீர் சேர்க்கவும். இந்த அரிசி முக்கால் அளவு தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும்.
பிறகு, அவற்றுடன் பால் சேர்க்கவும். பால் பொங்கி வரும் போது சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர், பாலில் கலந்து வைத்திருக்கும் குங்கும பூ-வை சேர்க்கவும். குங்கும பூ கிடைக்கவில்லை என்றால் ஏலக்காய் பொடி சேர்க்கலாம். இந்த கலவை நன்றாக கரண்டி வைத்து கலந்து கொள்ளவும்.
இதனிடையே, ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் நெய் விட்டு சூடேற்றவும். பிறகு அதில் முந்திரி, உலர்ந்த திராட்ச்சை, பாதம் பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுக்கவும்.
இதன்பின்னர், ஏற்கனவே தயாராகி வரும் பால், அரிசி கலவையுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான பால் பாயசம் ரெடி.