பச்சை பயறு வைத்து சூப்பராக தோசை செய்யலாம். இப்படி டிரை பண்ணுங்க.
கேழ்வரகு – அரை கப்
பச்சை பயறு – முக்கால் கப்
இஞ்சி – சிறிய துண்டு
சீரக தூள்- அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – 1
வெங்காயம் – 1
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ராகி, பச்சை பயறை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஊறவைத்த ராகி, ச்சை பயறை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சீரகத் தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்போது தோசை கல்லை அடுப்பில் வைக்கவும். அது சூடானதும் மாவை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வேகவிடவும். வேக விட்டபிறகு அதை எடுத்து தட்டில் வைத்து சுவையான கார சட்னி உடன் பரிமாறவும். செம்ம டேஸ்டாக இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.