எந்த விருந்தும் ரசம் இல்லாமல் முழுமை அடைவதில்லை, அதே போல, அவசரத்திற்கு ரசம்தான் சோறுக்கு நன்றாக இருக்கும். உடனடியாக செய்யக்கூடியதும் ரசம்தான். ஆனால், அடுப்பே பற்ற வைக்காமல் ரசம் செய்ய முடியுமா என்றால், செய்ய முடியும். பச்சப் புளி ரசம் அடுப்பே பற்ற வைக்காமல் செய்யலாம். சாதத்திற்கு ஒரு நிமிடத்தில் சைடு டிஷ் ரெடி செய்துவிடலாம். அதிலும், வேலை நிமித்தம் வெளியூர்களில் தனியாக தங்கி வேலை செய்யும் இந்த பேச்சிலர்களுக்கு இந்த பச்சப் புளி ரசம் ஈஸியானதாக இருக்கும்.
அடுப்பே பற்ற வைக்காமல் புளி ரசம் ஒரு நிமிடத்தில் எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம். நீங்களும் ஈசியாக செய்யலாம், முயற்சி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் 10
பூண்டு 9 பல்லு
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
கொத்துமல்லி
கறிவேப்பிலை
பச்சை மிளகாய் 2
புளி எலுமிச்சை அளவு
செய்முறை:
சின்ன வெங்காயத்தை உரலில் போட்டி இடித்து வைத்துக்கொள்ளுங்கள். அல்லது மிக்சியில் போடு அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அதே போல, பூண்டு தனியாக இடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
சீரகம் இடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய் இடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
புளியை ஊற வைத்து நன்றாகக் கரைத்து புளி தண்ணீரை வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது, புளி தண்ணீரில் இடித்து வைத்துள்ள வெங்காயம், மிளகு, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் எடுத்து ஒன்றாக கரைத்துவிடுங்கள். தேவையான அளவு உப்பு போட்டுக் கலக்கிக் கொள்ளுங்கள். பிறகு, கறிவேப்பிலையையும் கொத்துமல்லி, நறுக்கிப் போட்டு கலக்கிவிடுங்கள்.
அவ்வளவுதான் அடுப்பே பற்ற வைக்காமல் பச்ச புளி ரசம் தயார். கொத்து மல்லி கறிவேப்பிலை வாசத்துடன் புளி ரசத்தில் ஒரு வெட்டுவெட்டுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“