பச்சை பயறு இட்லி, இப்படி செய்தால் போதும், செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
2 கப் பச்சை பயறு
வெந்தயம் 1 ஸ்பூன்
1 கப் உளுந்து
உப்பு
செய்முறை : பச்சை பயறை நாம் கழுவ வேண்டும். தொடர்ந்து அதை தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து உளுந்தை 4 மணி நேரம் ஊறவைக்கவும் . பச்சை பயறுடன் வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும். தொடர்ந்து முதலில் பச்சை பயறை தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து உளுந்தை தனியாக அரைத்து மாவில் சேர்த்து, 10 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து இதில் உப்பு சேர்த்து இட்லி சுட்டு எடுக்கவும்.