தேவையான பொருட்கள்
ராகி
உளுத்தம் பருப்பு
வெல்லம்
தேங்காய் துருவல்
ஏலக்காய், சுக்கு
செய்முறை
ஒரு கடாயில் அரை கப் அளவிற்கு கேழ்வரகு( ராகி ) மீடியம் பிளேமில் வைத்து வறுத்து எடுக்கவும். லேசாக கலர் மாறி ஒரு நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைக்க வேண்டும்.
அதே கடாயில் கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்து சேர்த்து அதன் வாசம் வரும் வரை வறுத்து ஆற வைக்கவும். பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து வாசனைக்காக இரண்டு ஏலக்காய், சின்னதுண்டு சுக்கு சேர்த்து நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் இதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி ஐந்து கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவும். கட்டி இல்லாமல் கரைக்க வேண்டும். பின்னர் இதனை அடுப்பில் வைத்து கட்டி இல்லாமல் கஞ்சி பதத்திற்கு காய்ச்சவும். நல்ல மணம் வந்ததும் அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை கரைந்ததும் அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விடவும். இப்போது சூடான ராகி உளுந்து கஞ்சி ரெடியாகிவிடும். டீ, காபிக்கு பதிலாக இதனை எடுத்து கொள்ளலாம்.
இடுப்பு வலி, முதுகு வலி, கை கால் வலி பிரச்சனை ரத்த சோகை உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் இதை எடுத்துக் கொண்டாலே போதும் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“