"பாலக் பனீர் பராத்தா" வீடியோ, சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவைத் தேடுபவர்களுக்கு ஒரு சிறந்ததாக இருக்கும். ஊட்டச்சத்து நிறைந்த, சுவையான பராத்தா தயாரிப்பதற்கான எளிய மற்றும் விரைவான செய்முறையை பற்றி ரேகாஸ்குசினா இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். கீரையின் இரும்புச்சத்தும், பன்னீரின் புரதச்சத்தும் இந்த உணவை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்றதாக்குகிறது.
தேவையான பொருட்கள்:
பாலக் கீரை
பன்னீர் (100 கிராம்)
பச்சை மிளகாய்
இஞ்சி பேஸ்ட்
உப்பு
கோதுமை மாவு (ஒரு கப்)
நெய்
செய்முறை:
பாலக் கீரையை சுடுநீரில் போட்டு அலசி எடுத்து பின்னர் உடனடியாக ஐஸ் கோல்ட் தண்ணீரில் கழுவவும். பின்னர் பாலக் கீரை, பன்னீர், பச்சை மிளகாய், இஞ்சி பேஸ்ட் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவை, உப்பு, மற்றும் கோதுமை மாவு சேர்த்து மென்மையாக பிசையவும். பிசைந்த மாவை 30 நிமிடங்கள் ஊற விடவும். மாவை சிறிய சப்பாத்திகளாக உருட்டி எடுக்கவும்.
சூடான தவாவில் சப்பாத்திகளை ஒவ்வொன்றாகப் போட்டு, இருபுறமும் நெய் தடவி சுட்டு எடுக்கவும். இந்த சப்பாத்திக்கு சைட் டிஷ் எதுவும் தேவையில்லை; பிளைன் தயிர் மட்டுமே போதும்.