மீந்து போன இட்லியில் முட்டை சேர்த்து... 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் அக்கா ரெசிபி!
சுவையான முட்டை இட்லி எப்படி தயாரிப்பது என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் விரும்பி சாப்பிட வைக்கும்.
முன்னர் எல்லாம் சமையல் குறிப்புகளுக்காக புத்தகம் வாங்குவார்கள். இல்லையென்றால் அதற்கு பிரத்தியேகமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பார்கள். ஆனால், தற்போது சீரியல்களில் கூட சில சமையல் குறிப்புகள் சொல்கின்றனர். அந்த வகையில், பாண்டிய ஸ்டோர்ஸ் சீரியலில் சொல்லப்பட்ட முட்டை இட்லி எப்படி சிம்பிளாக செய்யலாம் என்று தற்போது காணலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, முட்டை மற்றும் இட்லி.
செய்முறை:
Advertisment
Advertisements
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இதன் பின்னர், ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி இவற்றுடன் சேர்க்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் காரத்திற்கு தேவையான அளவு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசனை போகும் வரை மீண்டும் வதக்க வேண்டும். அதன் பின்னர், ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.
இதையடுத்து இரண்டு முட்டையை இதில் உடைத்து ஊற்ற வேண்டும். இறுதியாக மீதமிருக்கும் இட்லியை உதிர்த்து இவற்றுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இப்படி செய்தால் சுவையான முட்டை இட்லி தயாராகி விடும்.