பன்னீர் நகட்ஸ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 200 கிராம்
மைதா - 1/4 கப்
மிகளாய் தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1 ஸ்பூன்
சோள மாவு - 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பால், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில், மைதா மற்றும் சோள மாவினை நன்கு சலித்து தூசி நீக்கி சுத்தம் செய்து தனியே எடுத்து வைக்கவும். அடுத்து எலுமிச்சை பழத்தினை இரண்டாக வெட்டி, சாறு புழிந்து தனியே எடுத்து வைக்கவும். இப்போது பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கி சுடுநீரில் 2 நிமிடங்கள் போட்டு எடுக்கவும். வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் சலித்த மாவுடன், மிகளாய் தூள், பேக்கிங் சோடா, மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும். கடைசியாக தேவையான அளவு பால் மற்றும் உப்பு சேர்த்து மாவை பக்கோடா பதத்திற்கு கலக்கவும். இப்போது, அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பக்கோடா பத மாவில் பன்னீரை பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க சுவையான பன்னீர் நகட்ஸ் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“