பன்னீர் பலரும் விரும்பி சாப்பிடுவர். உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்கள் உணவில் பன்னீர் எடுத்துக் கொள்வர். சப்பாத்தி பன்னீர் பட்டர் மசாலா சூப்பர் காம்போ. சைவம் சாப்பிடுபவர்கள் ஹோட்டல் சென்றால் இதை தவறாமல் சாப்பிடுவர். பன்னீர் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கும் விரும்பி சாப்பிடுவர். அந்த வகையில் ஈஸியாக செய்ய, ஈவ்னிங் ஸ்நாக்ஸ் பன்னீர் ஆம்லெட்.
தேவையான பொருட்கள்
முட்டை – 5
பன்னீர் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பன்னீரை துருவிக்கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரம் எடுத்து, அதில் துருவிய பன்னீர், பச்சை மிளகாய், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டை, பன்னீர் கலவையை ஊற்றி, சிறிய எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போடவும். வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான், சூடான பன்னீர் ஆம்லெட் தயார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil