பன்னீரில் பல ரெசிபிகள் செய்யலாம். ஆனால் பாயசம் செய்யலாம் என்பதை கேள்விபட்டு இருக்கிறீர்களா? சுவையான பன்னீர் பாயசம் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 1 கப்,
பால் - முக்கால் லிட்டர்
சர்க்கரை - ஒன்றரை கப்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவையான அளவு
திராட்சை - சிறிதளவு
பாதாம் அல்லது பிஸ்தா பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் எசன்ஸ் - கால் டீஸ்பூன்
செய்முறை
முதலில் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பால் நன்கு கொதித்து குறையும் போது துருவி வைத்துள்ள பன்னீரை சேர்க்கவும். பிறகு அதில் பாதாம் அல்லது பிஸ்தா பவுடர், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கவும். அடுத்தாக ஏலக்காய் எசன்ஸ் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான பன்னீர் பாயசம் ரெடி. சூடாகவோ அல்லது ப்ரிஜில் வைத்து குளிர வைத்தோ பருகலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/