குழந்தைகள் விரும்பும் பாப்கார்ன்... ரொம்ப ரொம்ப ஈஸி; 10 நிமிசத்துல இப்படி செஞ்சு குடுங்க: செஃப் வெங்கடேஷ் பட் டிப்ஸ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் பாப்கார்ன் எவ்வாறு செய்யலாம் என்று செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். இதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் பாப்கார்ன் எவ்வாறு செய்யலாம் என்று செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். இதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

author-image
WebDesk
New Update
Paneer popcorn

மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் மொறுமொறுப்பான பன்னீர் பாப்கார்ன் எவ்வாறு தயாரிக்கலாம் என்று சமையற்கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். குறிப்பாக 10 நிமிடங்களில் இந்த சுவையான ஸ்நாக்ஸை செய்து விடலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

கடலை மாவு,
மிளகாய் தூள்,
மிளகு தூள்,
சாட் மசாலா,
பூண்டு,
பச்சை மிளகாய்,
உப்பு,
கொத்தமல்லி,
தண்ணீர்,
பன்னீர்,
கடலை எண்ணெய் மற்றும்
கார்ன்ஃப்ளேக்ஸ்

செய்முறை:

Advertisment
Advertisements

ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் கடலை மாவு, அரை ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மிளகு தூள், அரை ஸ்பூன் சாட் மசாலா, பொடியாக நறுக்கிய பூண்டு அரை ஸ்பூன், இதே அளவிற்கு நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலக்க வேண்டும்.

இதனை ஒரு ஓரமாக வைத்து விட்டு பன்னீரை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பன்னீரை முதலில் கலக்கி வைத்திருந்த மசாலா கலவையுடன் சேர்த்து நன்றாக ஊற வைக்க வேண்டும்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து அதில் பன்னீரை பொறித்து எடுக்க தேவையான அளவு கடலை எண்ணெய் ஊற்ற வேண்டும். இப்போது, கார்ன்ஃப்ளேக்ஸை நன்றாக பொடியாக்கி அதனை பன்னீருடன் சேர்த்து கலக்க வேண்டும். 

இந்தப் பன்னீரை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொறிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மொறுமொறுப்பான பன்னீர் பாப்கார்ன் தயாராகி விடும். 10 நிமிடத்தில் தயார் செய்யும் இந்த ஸ்நாக்ஸை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: