பன்னீர், உருளைக்கிழங்கு இரண்டும் பலருக்கு பிடித்த உணவாக உள்ளது. உருளைக்கிழங்கு போண்டா சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் பன்னீர், உருளைக்கிழங்கு போண்டா கேள்விபட்டுள்ளீர்களா? ஆம், பன்னீர் – உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு போண்டா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 150 கிராம்
அரிசி மாவு – 25 கிராம்
மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
ஸ்டஃப்பிங் செய்ய
வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
பன்னீர் துண்டுகள் – 50 கிராம்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
நறுக்கிய கொத்த மல்லித்தழை, பச்சை மிளகாய் – சிறிதளவு
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
செய்முறை
ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை போட்டு கலந்து எடுக்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்த உருண்டைகளை மாவில் நன்கு போட்டு பிரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். அவ்வளவு தான் இப்போது சுவையான பன்னீர் – ஆலு ஸ்டஃப்டு போண்டா தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/