நரம்புத் தளர்ச்சி? நம்ம ஊர் பன்னீர் திராட்சையை இப்படி சாப்பிடுங்க: டாக்டர் வேணி

நரம்புத் தளார்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் பன்னீர் திராட்சையை சாப்பிட வேண்டும் என்று டாக்டர் வேணி கூறுகிறார்.

நரம்புத் தளார்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் பன்னீர் திராட்சையை சாப்பிட வேண்டும் என்று டாக்டர் வேணி கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
நரம்பு

நரம்பு தளர்ச்சிக்கு பன்னீர் திராட்சை

நரம்புத் தளர்ச்சி என்பது நரம்புகள் பலவீனமடைந்து, உடலின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் செயல்கள்  பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது. இது பொதுவாக கைகால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு, வலி, பலவீனம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். சில சமயங்களில், இது தசைச் சுருக்கங்கள், நடுக்கம், ஒருங்கிணைப்பு இழப்பு போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். இதுகுறித்து மருத்துவர் வேணி தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

Advertisment

நரம்புத்தளர்ச்சி ஏற்படக் காரணங்கள்: 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.

வைட்டமின்கள் குறைபாடு, அதிக அளவில் மது அருந்துதல் நரம்புகளை சேதப்படுத்தி நரம்புத்தளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதுபோன்ற பல காரணங்களால் நரம்புத் தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர் கூறுகிறார். 

Advertisment
Advertisements

நரம்புதளர்ச்சி வராமல் தடுக்கும் உணவுகள்:

1. பன்னீர் திராட்சை விதையோடு சேர்த்து சாப்பிட வேண்டும். இந்த பழங்களில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளதால் இதை அதிகம் சாப்பிடலாம். நரம்பு தளர்ச்சி வராமல் தடுக்கும்.

2. உடற்பயிற்சி - ஒவ்வொரு நாளும் நடைபயிற்சி அவசியம். ஒரு நாளைக்கு 150 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அமர்ந்து வேலை செய்பவர்கள் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை நடக்கவும். 

நரம்பு தளர்ச்சி வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்? | Ideal food for Neuropathy | Dr. A.VENI | Trichy

சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 

இவை அனைத்தியும் செய்து கொண்டே உணவில் தினசரி பன்னீர் திராட்சையை சாப்பிடுதல் மற்றும் உடற்பயிற்சி செய்வது நரம்பு தளர்ச்சி வராமல் தடுக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Health benefits of red grapes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: