இட்லி மாவு எதுவும் இல்லாமல், வெறும் பன்னீரில் செய்யும் இட்லி என்பதால், இதில் புரத சத்தும் அதிகம்.
தேவையான பொருட்கள்
பன்னீர்- 200 கிராம்
தேங்காய்த் துருவல்- 3 டேபிள் ஸ்பூன்
கேரட்- 2
புதினா
கருவேப்பிலை
பெருங்காயம்
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்
தயிர்- 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
நெய்
செய்முறை: பன்னீரை மிக்ஸியில் மாவு போல தண்ணீர் சேர்க்காமல் அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து தேங்காய்-யைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, அதை பன்னீருடன் சேர்க்க வேண்டும். பன்னீர்,, அரைத்த தேங்காய், தயிர், உப்பு சேர்த்து கல்லகவும். இந்நிலையில் ஒரு பாத்திரத்தில் கடுகு தாளித்து அதில் கேரட், புதினா, கருவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து வதக்கவும் . இதை பன்னீர் கலவையில் ஊற்றவும். தொடர்ந்து இட்லி பாத்திரத்தில் இட்லி போல் போட்டு அவித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“