பப்பாளி பழம் என்றாலே பல நன்மைகளை கொண்டது. பப்பாளி பழத்தில் வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை இருப்பதால் இது உடலுக்கு முகவும் நல்லது. இதுபோலவே பப்பாளி விதைகளில் ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. மேலும் பப்பாளி எண்ணெய் எடுக்க முடியும்.
இந்நிலையில் இதுபோலவே பப்பாளி இலையின் சாறு அதாவது பப்பாளி இலை ஜீஸ் உடலுக்கு மிகவும் நல்லது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மை அளிக்கிறது. ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துவதோடு வயிறு உப்புவதை தடுக்கிறது. பொடுகு பிரச்சனை மற்றும் வழுக்கை விழுதல் ஆகியவற்றை தடுக்கிறது.
ரத்ததில் உள்ள சக்கரை அளவை குறைக்கிறது. இன்சுலின் சுரப்பதை சீர்படுத்துகிறது. சர்க்கரை நோயால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் ஃபேட்டி லிவர் பொன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை, ரத்த போக்கை சீர்படுத்தவும் உதவுகிறது.
மாதவிடாய் காலங்களில், பப்பாளி இலை, சிறிய அளவு உப்பு, புளி ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் வலி நீங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் கல்லிரல் செயலிழப்பு, காமாலை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் ஜீரண சக்தியை உக்கப்படுத்துகிறது. அல்சர் நோய்யை தடுக்கிறது.