Advertisment

பெண்கள் கருப்பையை வலுவாக்க பப்பாளி: குழந்தை இன்மை பிரச்னைக்கு இப்படி முடிவு கட்டுங்க!

பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கான காரணங்கள், பெண்கள் கருத்தரிக்க உதவும் உணவுகள் மற்றும் ண் பெண் இருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவ உணவுகளை இங்கே தருகிறோம்.

author-image
WebDesk
Dec 14, 2022 21:19 IST
New Update
siddha treatment, uterus strengthen, fertility, solution to fertility problem, siddha medicine, கருப்பையை வலுவாக்க பப்பாளி, குழந்தை இன்மைகு தீர்வு, papaya benefits, papaya, fig fruit

குழந்தை பிறக்க தாமதமாகிறது என்பது பெரும் கவலை. அப்படியே கரு நின்றாலும், பலருக்கு ஓரிரு மாதத்திலே கலைந்துவிடுகிறது. சிலருக்கு சினைப்பை நீர்கட்டி, ஹார்மோன் பிரச்னை, உடல் எடை அதிகரித்தல், உடல் சூடு போன்ற நிறைய காரணங்கள் கருத்தரிக்க தடையாக இருக்கின்றன. நமக்கு தெரியாத காரணங்களும் பல இருக்கின்றன. அதை என்னவென்று கவனியுங்கள்.

Advertisment

எதை மாற்றலாம்? எதை திருத்திக் கொள்ளலாம்? எதைத் தவிர்க்கலாம் எனத் தெரிந்துகொண்டால் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.

 1. வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது.
 2. ஒரு நாளைக்கு 2-3 காபி, டீ குடிக்கும் பழக்கம் இருப்பது.

  அசிடிக் உணவுகளை அதிகம் உண்ணுவது – குளிர்பானங்கள், பீசா, பர்கர், நூடுல்ஸ், ஹோட்டல் உணவுகள், எண்ணெய் உணவுகள், ரெடிமேட் உணவுகள்.
 3. சூடான சாம்பார் பிளாஸ்டிக் கவரில் ஊற்றி தருவார்கள். அதைப் பலரும் சாப்பிடுகின்றனர். கொஞ்சம் சாம்பார் கொஞ்சம் பிளாஸ்டிக். இதுவும் ஒரு வகை காரணம் குழந்தையின்மைக்கு…
 4. எண்ணெய் குளியல் எடுக்கின்ற பழக்கம் இப்போது இல்லை. இதனால் உடல் சூடு அதிகமாக இருக்கும்.

  கீரை சாப்பிடும் பழக்கமும் மிகவும் குறைந்துவிட்டது. கீரைகள் சாப்பிட்டால் பாதி குழந்தையின்மை பிரச்னை தீர்ந்துவிடும்.
 5. பறக்காத, சத்தம் போட தெரியாத, சீக்கிரம் வளர வேண்டும் என ஊசி போட்டு வளர்க்கும் பிராய்லர் கோழி ஒரு முக்கிய காரணம். இதை சாப்பிடவே கூடாது.
 6. மாறிப்போன உணவுப் பழக்கங்கள்.
 7. தவறான வாழ்வியல் பழக்கம். காலை உணவைத் தவிர்ப்பது, நேரம் கழித்து உண்ணுதல்.

  நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாதவைகூட காரணமாக இருக்கலாம்.
 8. பிளாஸ்டிக்குகளை அடிக்கடி பயன்படுத்துகிறோம். அதன் கெமில்களும் ஒரு காரணம்.

  மாத்திரை, மருந்துகளில் மினுமினுப்பாக ஒரு கோட்டிங் வருகிறது. அதுவும் ஒருவகை பிளாஸ்டிக்தான்.
 9. மைக்ரோவேவ் அவென் பயன்பாடு. அதில் பால் காய்ச்சி, கேக், பிஸ்கெட் செய்து சாப்பிடுவது.

அதிலும் அவெனுக்குள் தரமான பிளாஸ்டிக் வைத்து சமையல் செய்கிறேன் என்று பிளாஸ்டிக் பாத்திரம் வைக்கிறார்கள்…

 1. பிளாஸ்டிக்கில் தரமானது என்ற ஒன்று கிடையவே கிடையாது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். பிளாஸ்டிக் காஸ்ட்லியாக விற்கப்பட்டால் அது தரமானதாகிவிடாது.

  புது பெயின்ட் வாசனை, புதிய பிளாஸ்டிக்கில் இருந்து வரும் தாலேட் விந்தணுக்களைப் பாதிக்கும்.
 2. பெண்களின் காஸ்மெட்டிக்ஸில் உள்ள பாராபென், தாலேட் போன்ற மோசமான கெமிக்கல்களும் ஒரு காரணம்.

  நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், முக கிரீம்கள் போன்றவை. இதில் பாராபென், தாலெட் அதிகம்.

இதுபோன்ற விஷயங்கள் கருத்தரிப்பை பாதிக்கும்.

விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

பெண்களுக்கு சினைப்பை பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

சினைப்பை நீர் கட்டி சரியாக, விந்தணுக்கள் அதிகரிக்க.

கீரைகளைத் தினமும் ஒரு வகை எனச் சாப்பிடுங்கள்.

அத்திப்பழம் மாதுளை வகை பழங்களை தினமும் சாப்பிடுங்கள்.

ஆண்கள் சாப்பிட வேண்டியவை.

ஆண்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியை சோறாக்கி சாப்பிட வேண்டும்.

முருங்கைகீரை பொரியல், முருங்கைக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

தம்பதியருக்கு.

பசலைக்கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்து தம்பதியர்கள் இருவரும் சாப்பிடுங்கள்.

உடல் பெருத்த பெண்கள்.

உடல் பெருத்த பெண்கள், முகத்தில் லேசாக முடி இருக்கும் பெண்கள், சோற்றுக் கற்றாழை ஜூஸை 48 நாளைக்கு பனை வெல்லம் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.

வெந்தயத்தை முன்னாளே ஊறவைத்து கற்றாழை ஜூஸூடன் சேர்த்துக் குடிக்கலாம். அல்லது அப்படியே சாப்பிடவும் செய்யலாம்.

பூண்டை உணவில் சேருங்கள். மறக்க வேண்டாம்.

சிறுதானியங்களை வாரத்தில் 3-4 முறையாவது சாப்பிடுவது நல்லது.

கருத்தரிக்க உடல்பருமன் தடையாக இருந்தால், கொடம்புளி சேர்த்த பானத்தை குடிக்கலாம். இந்த லின்கை பாருங்கள்.

பப்பாளி – பெண்ணுக்கு சிறந்த உணவு

கருப்பையை பப்பாளி வலுவாக்கும் குழந்தைக்கு திட்டமிடும் பெண்கள், தங்கள் கர்ப்பப்பப்யைத் தேற்றிக்கொள்ள பப்பாளியை சாப்பிடுங்கள். பப்பாளி சாப்பிட்டு 5-6 மாதம் கர்ப்பப்பையை வலுவாக்கிய பின் கருத்தரிக்க முயற்சிக்கலாம். வெற்றி நிச்சயம்.

உளுந்து

உளுந்தங்களி சாப்பிட்டு மாதவிடாய் பிரச்னைகளை சீர்செய்து கொண்டால், நீங்கள் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.

வாழைப்பழம்

மாலை அல்லது இரவு 7 மணிக்கு தினமும் 1-2 செவ்வாழை வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆண்களுக்கான சிறந்த உணவுகள்

ஆண்மைக்குறைவுக்கு நல்ல மருந்து வெண்டைக்காய். லேசாக எண்ணெய் விட்டு வதக்கி, லேசாகத் தண்ணீர் தெளித்து வேக வைத்து சாப்பிட வேண்டும். டீப் ரோஸ்ட் செய்தால் சத்துகள் கிடைக்காது.

அவரைக்காய், அவரையில் உள்ள விதைகள் ஆண்மைக் குறைவைப் போக்கும் மகா சக்தி படைத்தது. வாரம் இருமுறையாவது அவரைக்காயை ஆண்கள் சாப்பிடலாம்.

புரத உணவு பெண்களுக்கு

பெண்களுக்கு தேவையான புரதங்கள் கிடைக்கின்ற உணவு, பருப்பு உசிலி. எந்த காய்கறிகளுடன் இந்த பருப்பு உசிலியை சேர்த்துக் கொள்ளலாம். பீன்ஸ், கொத்தவரை, முட்டைக்கோஸ் என எதிலும் சேர்த்து சாப்பிடுங்கள். கருத்தரிக்க உதவும் ஆரோக்கிய உணவு இது.

அத்திக்காய்

அத்திக்காய், பெண்களுக்கு சிறந்த மருந்து. மாதவிடாய் வரும் முன்னர் மூக்கடைப்பு, தும்மல், எரிச்சல் உணர்வு, காய்ச்சல் வரும் உணர்வு போன்ற அனைத்தையும் போக்கும். அத்திக்காய் பச்சடி செய்து சாப்பிட்டு மாதவிடாய் தொல்லைகளை சரி செய்து கொண்டால், அடுத்து கருத்தரிக்க திட்டமிடும்போது உங்களது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வாழைப்பூ

வாழைப்பூ உரிக்க கஷ்டம்தான். ஆனால், வாழைப்பூ கர்ப்பப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பொதுவாகவே வாழைப்பூ சாப்பிட்டால் பெண்களுக்கு மிக நல்லது. குழந்தைப்பேறு கிட்டும்.

கஞ்சி

வெந்தயகஞ்சி, முளைவிட்ட வெந்தயகஞ்சி, உளுந்து கஞ்சி ஆகியவற்றை பெண்கள் சாப்பிட்டு வந்தால், நீங்கள் குழந்தைக்காக முயற்சி செய்கையில் நற்செய்தி விரைவில் கிட்டும். மாதுளைப்பழத்தை தினம் ஒன்று சாப்பிடுங்கள். இதுவும் ரொம்ப முக்கியம்.

கருப்பு திராட்சை

கொட்டை நீக்காத கறுப்பு பன்னீர் திராட்சை கிடைத்தால் தம்பதியர் இருவரும் அடிக்கடி சாப்பிடுங்கள். அல்லது கறுப்பு உலர்திராட்சையை தினந்தோறும் 15 எண்ணிக்கை அளவு சாப்பிடுங்கள். இதுவும் கொட்டை நீக்கப்படாதவையாக இருக்க வேண்டும்.

காபி, டீக்கு பதிலாக

தம்பதியர் இருவரும் காபி, டீ தவிர்த்து இந்தக் கஞ்சியை குடிக்கலாம். சிவப்பு சம்பா அரிசி அல்லது மாப்பிள்ளை சம்பா அரிசி, முளைக்கட்டி உலரவைத்த பாசிப்பயறு, கருப்பு கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, நன்கு வறுக்கப்பட்ட தொலி உளுந்து, பார்லி அரிசி, சம்பா கோதுமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு…

இவை அனைத்தும் தலா 250 கிராம். முந்திரி, பாதாம் – தலா 50 கிராம். தோல் சீவிய சுக்கு – 50 கிராம்.

இதையெல்லாம் வறுத்து மாவாகப் பொடித்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான்… சத்து மாவு தயார்.

தினமும் 3-4 ஸ்பூன் எடுத்து, சத்து மாவு கஞ்சி தயாரிக்கலாம். இதில் தேங்காய்ப் பால் சேர்த்து குடிப்பது இன்னும் பலன் அதிகம். இனிப்புக்கு வெல்லம் சேர்க்கலாம். வெள்ளை சர்க்கரை வேண்டாம்.

இந்த சத்து மாவு கஞ்சி உங்களது நாளையே ஆரோக்கியமாக்கும். உடலை தேற்றும். தம்பதியர், குழந்தைக்கு முயற்சி செய்தால், விரைவில் பலன் கிட்டும்.

முறையாக உணவுகளை சாப்பிட்டு வாருங்கள். மகிழ்ச்சியுடன் மன அமைதியுடன் இருக்க தியானம் செய்யுங்கள்.

தொடர்புக்கு: மருத்துவர் முத்துக்குமார்

சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்

செல்: 93441 86480

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment