வீட்டிலேயே பரோட்டா செய்ய ஆசைப்பட்டு செய்ய முடியாமல் மொத்த பரோட்டாவையும் வீண் செய்து விட்டீர்களா? பரோட்டா வீச தெரியவில்லையா? கவலை பட வேண்டாம். மிகவும் சுலபமாக இனி வீட்டிலேயே பாரோட்டா செய்யலாம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு
சர்க்கரை
பால்
உப்பு
எண்ணெய்
செய்முறை
2 கப் மைதா மாவில் தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு அரை கப் அளவிற்கு காய்ச்சாத பால் சேர்த்து கலந்து விடவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மாவை நன்றாக நீட்டி இழுத்து பிசைந்து கொள்ளவும். மாவை நன்றாக பன் போல் உருட்டிக் கொள்ளவும். மேலே கால் கப்பிற்கு மேல் எண்ணெய் சேர்த்து மூடி வைத்து ஊற வைக்கவும். குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
இரண்டு மணி நேரம் அல்லது அதற்கு மேலும் சிறிது நேரம் ஊறவைத்த பிறகு மாவை வெளியில் எடுத்து மீண்டும் ஒரு முறை பிசைந்து எண்ணெய் தடவி தேவையான அளவு ஒரே மாதிரியான உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
இந்த மாதிரி ஒரு முறை செஞ்சு பாருங்க பரோட்டா super soft டா இருக்கும் | Hubby சமைச்சு குடுத்தது |
பரோட்டா மாவு மாதிரி திரட்டி நன்கு வீசி உருண்டையாக்கி கைகளில் பரோட்டா மாவு போல் திரட்டி கொள்ளவும். பின்னர் அடுப்பில் கல்லை வைத்து சூடு ஏறியவுடன் எண்ணெய் ஊற்றி தட்டிய பரோட்டாவை மிதமான தீயில் வேகவிடவும். இரு புறமும் ஆயில் சேர்த்து திருப்பி விட்டு இளஞ்சிவப்பு நிறத்தில் சுட்டெடுக்கவும்.
பின்னர் சுட்டெடுத்த பரோட்டாவை வீசி எடுத்து குருமாவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையால்க இருக்கும்.