பரோட்டா சல்னா இனி வீட்டிலேயே அதுவும் இட்லி தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் தகுந்த மாதிரி எப்படி செய்வது என்று பார்ப்போம். இதற்கு தேங்காய், பொட்டுக்கடலை தான் முக்கியமே அதை அரைத்து ஊற்றி சால்னா செய்வது பற்றி ராம்சிவரீதா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்
சோம்பு
சீரகம்
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
தக்காளி
புதினா
கொத்தமல்லி தழை
உப்பு
மிளகாய்த்தூள்
கொத்தமல்லி தூள்
மஞ்சள் தூள்
கரம் மசாலா
தேங்காய்
பொட்டுகடலை
வேர்க்கடலை
மிளகுத்தூள்
சீரகத்தூள்
மல்லித்தழை
கருவேப்பிலை
செய்முறை
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு சீரகம், நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு வதக்கி கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி நறுக்கிய தக்காளி, புதினா, கொத்தமல்லி தழை சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். பின்னர் அதில் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
Parotta Salna
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து அரைத்து கொதிக்கும் சால்னாவில் ஊற்றி கொதிக்க விட்டு மேலே மிளகுத்தூள், சீரகத்துள், மல்லித்தழை தூவி இறக்கினால் பரோட்டா சால்னா ரெடி ஆகிவிடும்.