/tamil-ie/media/media_files/uploads/2023/06/salna.jpg)
பரோட்டா: சால்னா
இந்த முறை இப்படி பரோட்டா செய்து பாருங்கள் மிகவும் ஈசியான முறையில் லேயர் பரோட்டா செய்யலாம். மேலும் இப்படி சால்னா செய்தால் வயிற்றை பாதிக்காது.
லேயர் பரோட்டாவிற்கு தேவையான பொருட்கள்
2 கப் அளவு மைதா மாவு
2 டீஸ்பூன் சர்க்கரை
தேவையான உப்பு
ஒரு டீஸ்பூன் எண்ணெய்
3 டீஸ்பூன் மைதா மாவு
2 டீஸ்பூன் சக்கரை
3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
புரோட்டா செய்முறை : ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, உப்பு, எண்ணெய் அகியவற்றை சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக பிசைந்துகொள்ளவும். இந்நிலையில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, எண்ணை ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல செய்யவும். இந்நிலையில் பிசைந்து வைத்த மைதா மாவை, தனி உருண்டைகளாக ஆக்கவும். தொடர்ந்து ஒரு உருண்டை மைதா மாவை, மிகவும் மெலிதகாக தேய்க்க வேண்டும் . அதன் மீது மாவு பேஸ்டை முழுவதும் தடவ வேண்டும். தொடர்ந்து கத்தியால் சிறு கோடுகள் போட்டு. எல்லாவற்றை ஒன்றாக்க வேண்டும். தொடர்ந்து சப்பாத்தி கட்டை வைத்து பரோட்டா வடிவில் தேய்க்க வேண்டும். தற்போது தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.
சால்னாவுக்கு தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் பெருஞ்சீரகம்
பட்டை, கீரம்பு, ஏலக்காய்
2 பெரிய வெங்காயம்
கருவேப்பிலை
3 பச்சை மிளகாய்
2 தக்காளி
1 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
புதினா இலைகள்
கொத்தமல்லி இலைகள்
1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி பொடி
1 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
1 டீஸ்பூன் ஜிக்கன் மசாலா பொடி
அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி
தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
ஒரு மூடி தேங்காய் துருவல்
அரை ஸ்பூன் கசகசா
முந்திரி பருப்பு
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்க வேண்டும். தொடர்ந்து பெரிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். வெங்காயம் நிறம் மாறியதும், அதில் கொத்தமல்லி, புதினா சேர்க்க வேண்டும். இந்நிலையில் தொடர்ந்து தக்களியை சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து மல்லிப்பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்க்க வேண்டும் .தொடர்ந்து இதில் கடலை மாவை தண்ணீருடன் சேர்த்து கரைத்து, அதையும் சேர்க்க வேண்டும். மேலும் தேங்காய், கசகசா மற்றும் முந்திரி ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து கரைத்து, அதை இந்த கலவையில் ஊற்றுங்கள். குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வரை வைத்துவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.