வழக்கமான பருப்பு குழம்பு போல் இல்லாமல். மிகவும் எளிமையாக ஆந்திர ஸ்டலில் பருப்பு குழம்பு இப்படி சமைத்து பாருங்க.
தேவையான பொருட்கள்
100 கிராம் துவரம் பருப்பு
3 பெரிய தக்காளி
1 வெங்காயம்
10 பூண்டு பற்கள்
2 பச்சை மிளகாய்
ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள்
கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
2 ஸ்பூன் நல்லெண்ணை
கடுகு
காய்ந்த மிளகாய்
கருவேப்பிலை
புளி தண்ணீர்
நெய்
செய்முறை : குக்கரில் துவரம் பருப்பு தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கொஞ்சம் எண்ணெய் சேர்த்து 3 விசில் விட வேண்டும். தொடர்ந்து குக்கரை திறந்து பருப்பை நன்றாக கடைய வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு,கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து பருப்பு கலவையை சேர்க்கவும். அதில் புளி தண்ணிர் சிறு அளவில் சேர்த்துகொள்ளவும். கடைசியாக நெய் விட்டு கிளர வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“