சூடான சாதத்தில் பருப்புப் பொடி தூவி, நெய் விட்டு பிசைந்து சாப்பிடுவதே தனி ருசிதான், அதிலும் சமைக்க தெரியாத பேச்சுலர்ஸ் கூட இந்த பொடி செய்து வைத்திருந்தால் போதும், எப்போது வேண்டுமானாலும் சாதம் மட்டும் வடித்து இந்த பொடியை வைத்து சாப்பிடலாம்.
பருப்புப் பொடி செய்ய என்னென்ன தேவை?
துவரம் பருப்பு - 1/4 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
காய்ந்த கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - கால் டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் பருப்பு வகைகளை தனித்தனியாக நன்கு வாசம் வந்து சிவக்கும் வரை வறுத்து எடுக்கவும். சீரகத்தையும் வெறும் கடாயில் வறுக்கவும். சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயும் கறிவேப்பிலையும் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும். சிறிது ஆற விட்டு, உப்பு சேர்த்து அனைத்தையும் அரைத்து, காற்று புகாமல் பாட்டிலில் மூடி வைக்கவும்.
கமகமக்கும் பருப்புப் பொடி தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“