தனியா, உளுத்தம் பருப்பு சேர்த்த துவையல் ரெசிபி செய்வது குறித்து பார்ப்போம்.
தனியா – 50 கிராம்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – 1 துண்டு
காய்ந்த மிளகாய் – 5
மிளகு – ¼ டீஸ்பூன்
புளி, உப்பு- சிறிதளவு
வெல்லம் – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் சேர்க்காமல் தனியா மட்டுத் சேர்த்து வறுத்து எடுக்கவும். பின் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகை வறுத்தெடுத்து தனியாக வைக்கவும்.
ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு அதோடு புளி, உப்பு, வெல்லம் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். அடுத்து எப்போதும் போல் கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்தால் சுவையான தனியா பருப்பு சட்னி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“