குழந்தைகள் பாஸ்தா கேட்கிறார்கள் ஆனால் கடைகளில் வாங்கி கொடுப்பது உடலுக்கு நல்லது கிடையாது. அப்படி நினைப்பவர்கள் வீட்டிலேயே குழந்தைகளுக்கு டேஸ்டியான பாஸ்தா செய்து கொடுக்கலாம். மிகவும் சுலபமாக அதுவும் சத்தான ரேசன் அரிசி பாஸ்தா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ரேசன் அரிசி
எண்ணெய்
பெரிய வெங்காயம்
கரம் மசாலா
கொத்தமல்லி தூள்
மிளகாய் தூள்
உப்பு
சோயா சாஸ்
மஞ்சள் தூள்
தக்காளி சாஸ்
தக்காளி
புதினா
செய்முறை
ரேசன் அரிசியை நன்கு கழுவி ஊறவைத்து மாவு மாதிரி அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் அந்த மாவை ஊற்றி பிசையும் பதத்திற்கு வருமாறு கெட்டியாக வேகவிடவும்.
மாவு கைகளில் ஒட்டாமல் பிசையும் பதத்திற்கு வந்ததும் எடுத்து சப்பாத்திமாவு மாதிரி தேய்த்து பாஸ்தா செய்ய வேண்டிய வடிவில் நறுக்கி இட்லி சட்டிய்ல் வைத்து வேக விடவும்.
பின்னர் மேல் குறிப்பிட்ட மசாலாக்களையும் கரைத்து தனியாக வைக்கவும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வேக விடவும். வெந்ததும் சிறிது புதினா சேர்த்து இந்த மசாலா கரைசலையும் ஊற்றி கொதி விடவும்.
கொதி வந்ததும் அதில் வேகவைத்த பாஸ்தாவை கொட்டி மசாலாக்கள் பாஸ்தாவில் சேர்ந்து எண்ணெய் பிரிந்து வந்த பதத்தில் இறக்கி பரிமாறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“