கேரமல் சுவையில் அருமையான கேரமல் பால் சேமியா பாயாசம் எப்படி செய்வது என்று பார்ப்போம். பால் ஊற்றி சுவையாக செய்யலாம். கப் நிறைய கேட்டு வாங்கி குடிப்பார்கள். அதேபோல பந்தியில் வைக்கவும் இது சுவையாக இருக்கும். ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கேரமல் பாயாசம் எப்படெ செய்வது என்று செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
முழு கொழுப்புள்ள பால்
சேமியா
சர்க்கரை
நெய்
முந்திரி பருப்பு
காய்ந்த திராட்சை
தண்ணீர்
ஏலக்காய் தூள்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முழு கொழுப்புள்ள பாலை ஊற்றி காய்ச்சி கொள்ளவும். காய்ச்சிய பாலில் சிறிதளவு எடுத்து வைக்கவும். கேரமல் சிரப் செய்ய ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கலந்து விடவும்.
சர்க்கரை கரைந்து பிரவுன் நிறமாக மாறியதும் சிறிது சிறிதாக காய்ச்சிய பாலை சேர்த்து கலந்து விடவும். 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அருமையான பாயசம் ரெசிப்பீஸ் | Payasam Recipes In Tamil | Diwail Sweet Recipes | Sweet Recipes
ஒரு பானில் நெய் சேர்த்து, நெய் உருகியதும் முந்திரி, காய்ந்த திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். ஒரு அகல கடாயில் நெய் சேர்த்து சேமியாவை மிதமான தீயில் 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
பின்பு தண்ணீர் ஊற்றி சேமியாவை வேகவிடவும். சேமியா முக்கால் பாகம் வெந்ததும் தனியாக எடுத்து வைத்த பாலை ஊற்றி கலந்து விடவும். சேமியா முழுதாக வெந்ததும் தயார் செய்த கேரமல் சிரப்பை ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
அடுத்து ஏலக்காய் தூள் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கலந்து விடவும். 2 நிமிடம் கொதிக்க விடவும். அவ்வளவு தான் சுவையான கேரமல் சேமியா பாயாசம் தயாராகிவிடும்.