சுவையான பீர்க்கங்காய் கடையல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய் – 1 கப்
பெரிய தக்காளி – 1
பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 1 கப்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா 1/4 கப்
தாளிக்க
கடுகு – 1 டீஸ்பூன்
மோர் மிளகாய் வற்றல் – 3
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
நெய் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நீர் விட்டு வேகவிட்டுக் கொள்ளவும்.பிறகு இந்த கலவையை மத்தால் நன்கு கடைந்து கொள்ளவும். இந்த பருப்பு கடைசலை தனியாக வைக்கவும்.தாளிக்க வேண்டிய பொருட்களை எண்ணெய்யில் போட்டு தாளித்து பருப்பில் கொட்டவும்.
கடாயில் எண்ணெய் சிறிது விட்டு வெங்காயம், தக்காளி மற்றும் பீர்க்கங்காயை வதக்கி தாளித்து கொட்டிய பருப்பு கடைசலை சேர்த்து, சாம்பார் பொடி சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கவும்.இதை குக்கரில் மாற்றி ஒரு விசில் விட்டும் இறக்கலாம். கடைசியாக நெய்யில் 1 டீஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை தாளித்து இந்த கடைசலில் கொட்டவும். அவ்வளவு தான் சுவையான, ஆரோக்கியமான பீர்க்கங்காய் கடையல் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil