Advertisment

வைட்டமின் 'ஏ' சத்து நிறைந்த பீர்க்கங்காய் கடையல்: அட...டா... என்ன ஒரு சுவை

பீர்க்கங்காயில் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது. இதுபோல இதில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு என்பதால் நாம் அதிக அளவில் இந்த கடையலை எடுத்துக்கொள்ள முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பீர்க்கங்காய் கடையல்

பீர்க்கங்காய் கடையல்

பீர்க்கங்காயில் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது. இதுபோல இதில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு என்பதால் நாம் அதிக அளவில் இந்த கடையலை எடுத்துக்கொள்ள முடியும்.

Advertisment

தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய் 100கிராம்

சின்ன வெங்காயம் 15 நறுக்கியது

உப்பு

கடுகு, உளுந்தம்பருப்பு

எண்ணெய்

மஞ்சள் பொடி

தக்காளி

புளி

பச்சை மிளகாய்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்துகொள்ளவும். எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, உளுந்தம் பருப்பு சேர்க்க வேண்டும். காய்ந்த வர மிகளாய் 2 சேர்க்க வேண்டும். சின்ன வெங்காயம் அரை கப் சேர்க்க வேண்டும். வெங்காயம் நிறம் மாரியதும், கறிவேப்பிலை சேர்க்கவும். தொடர்ந்து 8 பச்சை மிளகாய்யை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து உப்பு சேர்த்து வதக்கவும். இவை நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்க்க வேண்டும். தொடர்து மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். 100 கிராம் பீர்க்கங்காய் நறுக்கியதை தற்போது சேர்த்து வதக்க வேண்டும். சிறிய அளவில் புளித் தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து 7 நிமிடங்கள் வரை வேகவிடவும். தற்போது மரக் கரண்டியை வைத்து கடைய வேண்டும். சுவையான பீர்க்கங்காய் கடையல் ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment