மழை சாரல் போல் வேர்க்கடலை பொடி தூவி... எல்லா சாப்பாட்டுக்கும் ஏற்ற பீர்க்கங்காய் தொக்கு!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ஏற்ற மற்றும் எல்லா வகையான சாப்பாட்டுக்கும் ஏற்ற பீர்க்கங்காய் தொக்கு எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ஏற்ற மற்றும் எல்லா வகையான சாப்பாட்டுக்கும் ஏற்ற பீர்க்கங்காய் தொக்கு எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ஏற்ற மற்றும் எல்லா வகையான சாப்பாட்டுக்கும் ஏற்ற பீர்க்கங்காய் தொக்கு எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
அன்றாட நாம் சமைத்து வரும் சாதம் போன்ற உணவுக்கு தொட்டுக் கொள்ள என்ன தயார் செய்யலாம் என்கிற குழம்பிய மன நிலையில் இருப்போம். காலை மற்றும் மாலையில் பலரும் சாதம் சாப்பிட்டு வருகிறார்கள். அதற்கு ஏற்ற டேஸ்டியான குழம்பு, பொரியல் என தயார் செய்தால் தான் வீட்டில் இருக்கும் மக்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
Advertisment
அந்த வகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ஏற்ற மற்றும் எல்லா வகையான சாப்பாட்டுக்கும் ஏற்ற பீர்க்கங்காய் தொக்கு எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
முதலில் பிஞ்சு பீர்க்கங்காய் ஒன்றை எடுத்து அதன் தோலை சுரண்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு கத்தியால் கொஞ்சம் பெரிய பீஸ்களாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர், ஒரு கடாய் எடுத்து அதில் பச்சை வேர்க்கடலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன் சூடு ஆறிய பிறகு அதனை மிக்சியில் போட்டு பவுடர் போல் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
இதன்பிறகு, ஒரு கடாய் எடுத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர் அதில் கடுகு, சீரகம் சேர்த்து பெரிய விடும். தொடர்ந்து கருவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும். இஞ்சி - பூண்டில் இருக்கும் பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
பிறகு, ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும். இவை ஓரளவுக்கு வதங்கி வந்த பின்னர், அதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். இவற்றை நன்கு கிளறி விடவும்.
இதன்பிறகு, ஏற்கனவே பொடி செய்து வைத்துள்ள வேர்க்கடலை பொடியை சேர்த்துக் கிளறவும். நன்கு கலந்து விட்ட பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
இவற்றை சிறிது நேரம் கொதிக்க விட்டு சுண்டி வந்த பிறகு கீழே இறக்கி வைத்தால், பீர்க்கங்காய் தொக்கு ரெடி. இந்த தொக்கை உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து ருசிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“