பல வீடுகளில் காலை உணவாக பொங்கள் செய்வது உண்டு. இந்த பொங்கலை பிரபல சமையல் கலைஞர் தீனா, கொஞ்சம் நெய், அதிகம் எண்ணெய் ஊற்றி, கும்பகோணம் மிளகு நெய் பொங்கல் செய்து காட்டியுள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் தீனா-வின் ரெசிபி மிளகு நெய் பொங்கல் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி 1/2 கிலோ, பயித்தம் பருப்பு 1/2 கிலோ. ரவை 1/2 கிலோ, நெய் 250 கிராம், மிளகு 25 கிராம், சீரகம் 45 கிராம், இஞ்சி நறுக்கியது 3 டீஸ்பூன், கறிவேப்பிலை தேவையான அளவு. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, பெருங்காயம் சிறிதளவு.
செய்முறை
பச்சரிசியை ஊற வைக்க வேண்டும். ரொம்ப ஊற வைக்கக்கூடாது. ஒரு பாத்திரத்தை எடுத்து ஸ்டவ்வில் வைத்து 3-4 லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள். அதில் பச்சரிசியைப் போடுங்கள். அதே சமயத்தில், இன்னொரு பாத்திரத்தில் தனியாக தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, பயித்தம் பருப்பை ஊற வைக்காமல், கழுவிய பிறகு, அதை கொதிக்கும் தண்ணீரில் போடுங்கள்.
பச்சரிசி வெந்த பிறகு, தண்ணீரை வடிகட்டிவிடுங்கள். பயித்தம் பருப்பு வெந்த பிறகு, அதை எடுத்து, வடித்து வைத்த பச்சரி சோற்றில் ஊற்றுங்கள்.
இப்போது, அதில் தேவையான அளவு உப்பு போடுங்கள். சிறிதளவு பெருங்காயத்தூள் போடுங்கள், அடுத்து, நறுக்கி வைத்துள்ள இஞ்சியைப் போடுங்கள். நன்றாக கலந்துவிடுங்கள். இப்போது ஸ்டவ்வில் தீயை வைத்து சூடுபடுத்திக்கொண்டே, கொஞ்சம் கொஞ்சமாக ரவை போட்டு கலந்துவிடுங்கள். நன்றாகக் கலந்துவிட்ட பிறகு, அதை எடுத்து, ஒரு பக்கம் வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கடாயை எடுத்து ஸ்டவ்வில் வைத்து காயவையுங்கள், அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் காந்ந்த பிறகு, தீயை மிதமாக வைத்துகொண்டு, எண்ணெய் கடாயில் மிளகு போட வேண்டும். மிளகு போட்டால் நன்றாக வெடித்து பொரிய வேண்டும். அடுத்து சீரகம் போட வேண்டும், சீரகமும் பொரிய வேண்டும். அடுத்து கறிவேப்பிலை போட வேண்டும். அடுத்து முந்திரி பருப்பு போட வேண்டும். இப்போது இதை எடுத்து, பொங்கல் சோறில் ஊற்ற வேண்டும். ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு நன்றாகக் கிளறிவிடுங்கள். இப்போது இறுதியாக நெய் எடுத்து பரவலாக ஊற்றி கிளறிவிடுங்கள். அவ்வளவுதான், சுவையான மிளகு நெய் பொங்கல் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“