scorecardresearch

இரவில் பாலுடன் 4 பாதாம், 6 மிளகு… உங்க பெரிய பிரச்னைக்கு எளிய தீர்வு

மிளகின் பலன்கள் ஏராளம், இது வெறும் ஆம்லேட் அல்லது சிக்கனை வறுக்க பயன்படுத்தக் கூடியது மட்டுமல்ல. இது பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டது.

இரவில் பாலுடன் 4 பாதாம், 6 மிளகு… உங்க பெரிய பிரச்னைக்கு எளிய தீர்வு

மிளகின் பலன்கள் ஏராளம், இது வெறும் ஆம்லேட் அல்லது சிக்கனை வறுக்க பயன்படுத்தக் கூடியது மட்டுமல்ல. இது பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டது.

உங்களுக்கு கடும் சளித் தொல்லை இருந்தால் மிளகு சிறந்த நிவாரணி. மேலும் செரிமாணத்தை தூண்டும் . மேலும் நாம் தினமும் சாப்பிடும்போது மிளகு ரசத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதில் கால்சியம், பாஸ்பரஸ், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் ஆகிய சத்துகள் உள்ளது.மேலும் நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் பாதிக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. காய்ச்சலுடன் வயிற்று வலி ஏற்பட்டாலும் மிளகு பயன்படுத்தலாம்.

மேலும் மிளகு சாப்பிடுவதால் நமது எச்சில் அதிகமாக சுரக்கும்.  இதனால் அஜீரணம் ஏற்படாமல் தடுக்கும். மேலும் உணவு செரிமாணமாக உதவும். ஒருவேளை நீங்கள் அதிகம் சாப்பிட்டுவிட்டால், மோரில் மிளகுத் தூள் சேர்த்து குடித்தால் உடனே ஜீரணமாகும்.

இதுபோல வெல்லம் மற்றும் மிளகை பொடித்து அதை  தண்ணீருடன் கலந்து சாப்பிடலாம். சளித் தொல்லை இருந்தால் பாலுடன் மிளகை சேர்த்து குடிக்கலாம்.

சளியுடன் தும்பல் இருந்தால், 20 கிராம் மிளகை பொடியாக்கி பாலில் சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இதை தினமும் ஒரு நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் சோர்வாக இருந்தால், தேனில் ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து காலையிலும் மாலையிலும் சாப்பிட வேண்டும்.

வித்தணுக்கள் குறைவாக இருப்பவர்கள், 5 பாதம், பருப்பு, 6 மிளகை பொடியாக்கி இரவில் பாலில் சேர்த்து குடிக்க வேண்டும். பல் சொத்தை மற்றும் வாய் நாற்றம் போக்க, மிளகுத்தூள் உப்பு சேர்த்து டூத் பேஸ்டை உருவாக்கி அதில் பல் துலக்க வேண்டும் .

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Pepper usage for health complications