சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள்... ஒரு முட்டை போதும் இந்த மாதிரி சப்பாத்தி செய்து கொடுங்கள்

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் வயிறு நிறைய சத்தாக சாப்பிட என்ன மாதிரியெல்லாம் உணவு சமைக்கலாம் என்று பார்ப்போம்.

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் வயிறு நிறைய சத்தாக சாப்பிட என்ன மாதிரியெல்லாம் உணவு சமைக்கலாம் என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
முட்டை சப்பாத்தி

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ஒரு ரெசிபி. முட்டை வைத்து முட்டை சப்பாத்தி எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 
 
கோதுமை மாவு  
உப்பு  
எண்ணெய்   
முட்டை  
வெங்காயம் 
பச்சை மிளகாய் 
பூண்டு  
இஞ்சி  
கொத்தமல்லி இலை

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் போட்டு கலந்து, தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மாவை நன்கு பிசைந்து 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து சிறிய உருண்டைகளாக பிரித்து சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்.

Advertisment
Advertisements

அடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். தவாவை சூடு செய்து செய்த சப்பாத்தியை போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டெடுக்கவும். 

அடுத்து தவாவில் செய்து வைத்த முட்டை கலவையில் சிறிதளவு ஊற்றி அதன் மேல் செய்த சப்பாத்தியை வைத்து லேசாக அழுத்தவும். முட்டை சப்பாத்தி தயார்.

Egg Chappathi Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: