/indian-express-tamil/media/media_files/2025/04/17/9sQ9k19m9UOxT9OfJLgb.jpg)
வீட்டில் பூரி செய்யும்போது புசு புசுவென உப்பி வரவில்லையே என்று கவலைப்படாதீர்கள், எவ்வளவு மாவு எடுத்துக்கொள்ள வேண்டும், எவ்வளவு தண்ணீர் சேர்க்க வேண்டும் வேறு என்ன பொருள் சேர்க்க வேண்டும் என்பதை டீ கடை கிச்சன் (Tea Kadai Kitchen) என்ற யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர்.
பூரி பலருக்கும் பிடித்தமான உணவாக இருந்தாலும், வீட்டில் பூரி செய்யும்போது, புசுபுசுவென உப்பி வரவில்லை என்று பலரும் சலித்துக்கொள்வது உண்டு. அதனால், புசு புசு பூரிக்கு இந்த 3 பொருள்களைச் சேர்த்து மாவு பிசைந்து செய்து புசு புசுவென உப்பி வரும் பாருங்கள்.
வீட்டில் பூரி செய்யும்போது புசு புசுவென உப்பி வரவில்லையே என்று கவலைப்படாதீர்கள், எவ்வளவு மாவு எடுத்துக்கொள்ள வேண்டும், எவ்வளவு தண்ணீர் சேர்க்க வேண்டும் வேறு என்ன பொருள் சேர்க்க வேண்டும் என்பதை டீ கடை கிச்சன் (Tea Kadai Kitchen) என்ற யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர். புசு புசு பூரி எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம்.
பூரி செய்முறை:
மாவு பிசைய ஒரு பெரிய பாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் மைதா மாவு 150 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் கோதுமை மாவு 150 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். கோதுமை மாவில் மட்டும்கூட செய்யலாம்.
இருப்பினும், இங்கே இரண்டு மாவையும் கலந்துவிடுங்கள். ஸ்டவ்வைப் பற்றை வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதில், 1 கப் தண்ணீர் ஊற்றுங்கள். அதாவது 250 மி.லி தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் சூடாகும்போது, அதில், கால் டீஸ்பூன் தூள் உப்பு போடுங்கள். ஒரு டீஸ்பூன் ரவை போடுங்கள், அரை டீஸ்பூன் சர்க்கரை போடுங்கள், ஒரு டீஸ்பூன் நெய் போடுங்கள், நன்றாக கலந்துவிடுங்கள். தண்ணீர் லேசாக ஒரு கொதி வந்ததும், ஒரு சுற்று சுற்றிவிட்டு மாவில் ஊற்றிவிடுங்கள். இப்போது, மரக்கட்டையால் மாவைக் கலந்துவிடுங்கள். மாவு சூடாக இருக்கும் என்பதால் கையால் பிசைய முடியாது. அதனால், மாவை 5 நிமிடம் மூடி வைத்து ஊற விடுங்கள். 5 நிமிடம் கழித்து திறந்து பாருங்கள், இளஞ்சூட்டுடன் நன்றாக ஊறி இருக்கும்.
இப்போது, இளஞ்சூட்டீல் மாவைக் கையால் நன்றாகப் பிசையுங்கள். உருண்டையாக மாற்றிவிட்டு, லேசாக எண்ணெய் தடவிவிட்டு 10 நிமிடம் ஊற வையுங்கள். 10 நிமிடங்கள் கழித்து, மாவை எடுத்து ஒரு முறை பிசைந்து எடுத்து, உருட்டி நீளவாக்கில் ரோல் செய்துகொள்ளுங்கள். மாவை துண்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். அதன் மீது ஒரு ஈரத்துணி மூடி வைத்துக்கொள்ளுங்கள். அதிலிருந்து ஒவ்வொன்றக எடுத்து வட்டமாக பூரியை தேய்த்துக்கொள்ளுங்கள். தேய்ப்பதற்கு மைதா மாவு பயபடுத்துங்கள்.
அடுத்து, எண்ணெய்யைக் காய வைத்து, வட்டமாகத் தேய்த்த பூரியை எண்ணெயில் போடுங்கள், உப்பி வரும் பூரி மீது கரண்டியில் எண்ணெய்யை அள்ளி ஊற்றுங்கள். பிறகு பூரியை திருப்பி விடுங்கள், வெந்த பிறகு பூரியை எடுத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதன் புசுபுசு பூரி தயார். பூரி கிழங்கு அல்லது குருமாவுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us