பெண்கள் வாழ்வில் மாதவிடாய் காலங்கள் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது. ரத்த போக்கு, வலி மற்றும் மன நிலையில் ஏற்றத்தாழ்வு என்று பல விஷயங்கள் பெண்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. கூடுதலாக வேலைப் பழு, குடும்ப பொருப்பு இப்படி சுழலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்கள் மேலும் சுமையாகிவிடுகிறது. மாதவிடாய் முதல் நாளில் வலியை தாங்கிக்கொள்ள இயலாமல், ஹாட் பெக் வைத்து சமாளிக்கும் பெண்கள் ஏராளம். இப்படி மாதவிடாய் காலங்களை எப்படி சமாளிப்பது என்று நாம் யோசித்துக்கொண்டு இருக்கையில். இந்த காலத்திற்கு ஏற்ற உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். பொதுவாக வலி அதிகமாகும் போது உணவில் நாட்டம் ஏற்படாது, ஆனால் மதாவிடாய் சவால்களை சமாளிக்க இந்த மூன்று உணவு வகைகள் மிகவும் முக்கியம்.
தயிர்
அதிக கால்ஷியம் மற்றும் புரத சத்து நிறைந்த தயிரை எடுத்துகொள்ள வேண்டும். தயிர் சாப்பிட்டால் நம் தசைகளில் தளர்வு ஏற்பட்டு வலி குறையும். மேலும் மாதவிடாய் ஏற்படுதற்கு முன்பான பிரச்சனைகளை குறைக்கும். மேலும் மோர் அல்லது ஸ்மூத்தி செய்து தயிரை நீங்கள் சேர்த்துகொள்ளலாம்.
நட்ஸ்
ஒமேகா பேட்டி ஆசிட் மற்றும் புரத சத்து நட்ஸில் அதிகம் இருக்கிறது. நட்ஸ் சாப்பிடுவதால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பசியை கட்டுப்படுத்தும். மேலும் துரித உணவுகள் சாப்பிடலாமல் தடுக்க உதவுகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் அதிகம் பொட்டாஷியம், இருப்பதோடு வைட்டமின் பி6 இருப்பதால், மாதவிடாய் காலங்களில் உங்கள் மன நிலையை சரியான திசையில் கொண்டு செல்ல உதவும்.