கலர்ஃபுல்லாக எந்த உணவைக் கொடுத்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று வண்ணமயமான சப்பாத்தி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம், அதுவும் செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தாமல்!
பீட்ரூட்டில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம், சல்பர், ஜிங்க், மெக்னீசியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன. பீட்ரூட் சருமத்திலுள்ள வியாதிகள் அத்தனைக்கும் மருந்தாகப் பயன்படுத்தக் கூடிய வல்லமை கொண்டது. அது மட்டுமல்ல பீட்ரூட்டில் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் கூட அதிகமுண்டு. எனவே சருமத்தின் வறட்சியைப் போக்கி பொலிவைத் தூண்டுவதிலும் பீட்ரூட் முன்னிலை வகிக்கிறது.
பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி குடிப்பதினால் உயர் ரத்த அழுத்த பாதிப்புகள் மற்றும் ஹார்ட் அட்டாக் அபாயம் குறையும். காரணம் பீட்ரூட்டில் இயற்கையாக உள்ள டயட்டரி நைட்ரேட் ரத்தக் குழாயில் உள்ள அழுத்தங்களை ஒழுங்கமைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
இப்படி ஏராள ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ள பீட்ரூட்டில் இன்று கலர்ஃபுல்லான சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பாருங்கள்!
தேவையான பொருட்கள்:
1 கப் – மாவு
½ கப் – வேகவைத்த பீட்ரூட் சாறு
செய்முறை:
பீட்ரூட்டை வேகவைத்து, மிக்சி ஜாரில் சேர்த்து சாறு எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் மாவு மற்றும் கூழ் சேர்த்து மாவை நன்கு பிசையவும்.
எப்போதும் போல மாவை உருண்டை பிடித்து, சப்பாத்தி கட்டையில் வைத்து, உங்களுக்கு பிடித்த வடிவத்தில் தேய்க்கவும்.
அடுப்பில் தோசைக் கல் வைத்து காய்ந்ததும், அதில் சப்பாத்தி போட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் நெய் தடவிக் கொள்ளலாம்!
கலர்ஃபுல் சப்பாத்தி ரெடி!
இன்னைக்கே இந்த பீட்ரூட் சப்பாத்தி செய்ஞ்சு உங்க குழந்தைங்களை அசத்துங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“