நம்மில் பலருக்கு ஊறுகாய் இருந்தால்தான் சோறே இறங்கும். குறிப்பாக, உப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் ஊறுகாய்க்கு, உணவுப் பிரியர்களின் விருப்பப் பட்டியலில் பிரதான இடம் உண்டு.
தேவையானவை
எலுமிச்சை பழம் - 10
இஞ்சி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 50 கிராம்
எலுமிச்சை சாறு - கால் கிண்ணம்
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
எலுமிச்சம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
இஞ்சியைக் கழுவி, நீளமானத் துண்டுகளாக நறுக்கவும்.
கண்ணாடி பாட்டிலில் நறுக்கிய எலுமிச்சம் பழத்துண்டுகள், நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாயுடன் உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்து பாட்டிலை நன்கு குலுக்கவும். ஒரு வாரம் வரை, தினமும் இரண்டு மூன்று முறை பாட்டிலைக் குலுக்கவும். அப்போதுதான் எல்லாம் ஒன்றாக ஊறி, ஊறுகாய் சுவையாக இருக்கும். இதை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
குறிப்பு: ஊறுகாய் நீண்ட நாள்கள் கெடாமல் இருக்க, கட்டிப் பெருங்காயத்தை நெருப்பில் சுட்டு ஊறுகாய் ஜாடிக்குள் போட்டு விட்டு அதன்மேல் ஊறுகாயை வைத்தால் பூஞ்சை வராது. ஊறுகாய் ஜாடியை வாரம் ஒருமுறை வெயிலிலும் வைத்து எடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“