நீரிழிவு நோயால் நம்மில் பலர் பாதிக்கப்பட்டிருப்போம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால் எந்த உணவை சாப்பிடுவது? எந்த உணவை தவிர்ப்பது ? என்ற கேள்விகள் நம்மை கடும் குழப்பத்தில் ஆழ்த்தும். நீரிழிவு நோய் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மேலும் நீரிழிவு நோய் பாதிப்பு கடந்த 10 ஆண்டுகளாகவே 150% அதிகரித்துள்ளது.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மேலும் பரம்பரை நோயாகவும் இது இருக்கிறது.சரியான உணவு முறை, உடல்பயிற்சி, தூக்கம் இவையே நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
இந்நிலையில் நீரிழிவுக்கு நோய்க்கு சக்கரை எதிராக பார்க்கப்படுகிறது. இதனால் இனிப்பு மிகுந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்போம். இதில் அன்னாசிப் பழமும் ஒன்று. சக்கரை நோயாளிகள் கிளைஸிமிக் இண்டக்ஸ் ( Glycemic index) குறைவாக இருக்கும் பழங்களைத்தான் அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக அன்னாசி பழத்தில் சிறிது அதிகமாக கிளைஸிமிக் இண்டக்ஸ் இருக்கிறது. இதனால் சக்கரை நோயாளிகள் அன்னாசிப் பழத்தை சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இதில் நார்சத்து, வைட்டமின்கள் அதிகம் இருக்கிறது. மேலும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் ஒரு நிறைவான உணர்வு ஏற்பட்டு அதிகம் பசிக்காது. நமது உடல் மெதுவாக சக்கரை உள்வாங்க்கொள்ளும் பக்குவத்தை அன்னாசிப் பழம் தருகிறது. இருப்பினும் இதில் அதிக கிளைஸிமிக் இண்டக்ஸ் இருப்பதால் குறைந்த கிளைஸிமிக் இண்டக்ஸ்கொண்ட பழங்கள், நட்ஸ் மற்றும் மற்ற உணவுகளுடன் சேர்த்து, சாப்பிடலாம். பொதுவாக நன்கு பழுத்த அன்னாசிப் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். சிறிது காயாக இருக்கும் பழங்களை தேர்வு செய்யவும்.
பதப்படுத்தப்பட்ட அன்னாசிப் பழங்களை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவும். மேலும் நாம் மதிய உணவு சாப்பிட்ட பிறகு சிறிய அன்னாசிப்பழ துண்டுகளை சாப்பிடுதால் சக்கரை நோய் அதிகரிக்காது.