உடலில் உள்ள கொழுப்பை தான் கொலஸ்ட்ரால் என்கிறோம். கொழுப்பு சத்து நல்லது என்றாலும் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது அthu பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று டாக்டர் நித்தியா கூறுகிறார். அந்த மாதிரி உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால் என்ன மாதிரியான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று டாக்டர் நித்யா ஹெல்த் காஃபே தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் இதயம் முக்கியமாக பாதிக்கப்படும். அடுத்து கல்லீரல் பாதிக்கப்படும், ரத்த நாளங்கள் பாதிக்கப்படும். கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தாலே இந்த மூன்று விஷயங்களும் பாதிக்கப்படும் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
கொலஸ்ட்ரால் நம் ரத்த நாளங்களில் அடைப்புகளை ஏற்படுத்தும் போது மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கொழுப்புகளிலும் வகைகள் உள்ளது. இவை வெவ்வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
கொழுப்பு அதிகமாக இருந்தால் ஃபேட்டி லிவர் பிரச்சனைகளும் வரும். அன்றைய காலத்தில் மது அருந்துபவர்களுக்கு தான் வந்தது. ஆனால் தற்போது அனைவருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. இதற்கு அதிகப்படியான கெட்ட கொழுப்பு தான் காரணம். அதே மாதிரி பித்த பித்தப்பையிலும் கற்கள் மாதிரி சேரும்.
Advertisment
Advertisements
அடிவயிற்று பகுதி தொடை பகுதிகளில் அதிகமாக கொழுப்பு சேர்ந்து விடும். இதனால் நிறைய பாதிப்புகள் ஏற்படும். இது மாதிரியான அதிகப்படியான கொழுப்புகளை எப்படி குறைக்கலாம் என்று பார்ப்போம்.
கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு பிபி இருக்கும். அவர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமானவற்றை பார்க்கலாம்.
காலதாமதமாகி சாப்பிடக்கூடாது.
இரவு நேரங்களில் ஈசியாக செரிமானமாக கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.
சீக்கிரம் சாப்பிட்டு விட வேண்டும்
பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் அன்னாச்சி பழம் கொழுப்பை குறைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்புகளை குறைக்க அண்ணாச்சி பழம் உதவும் வாரம் இரண்டு முறை இதனை எடுத்துக் கொள்ளலாம்.
செய்முறை: நான்கு துண்டு அன்னாசிப்பழம் எடுத்து மூன்று லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் சீரகம், சோம்பு அல்லது ஓமம் சேர்த்து கொதிக்க விட்டு இரண்டு லிட்டர் தண்ணீராக கொதிக்கவிட்டு ஒரு நாள் முழுதும் குடிக்கலாம் வாரம் இரண்டு முறை இதனை பின்பற்ற வேண்டும்.
இதனால் உடலில் உள்ள கொழுப்புகளை கூட கரைத்து விடும். எலுமிச்சை சாறும் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.