நெய் மணக்க சுவையான அன்னாசிப் பழ அல்வா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அன்னாசிப் பழம் - 250 கிராம்
பாதாம் - 250 கிராம்
முந்திரி - 15 கிராம்
பால்கோவா - 150 கிராம்
சர்க்கரை - 125 கிராம்
நெய் - 150 கிராம்
ஏலக்காய் பொடி- சிறிதளவு
செய்முறை
முதலில் அன்னாசி பழத்தின் தோல் சீவி எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு அடிகனமாக பாத்திரம் வைத்து அதில் கொஞ்சம் நெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய அன்னாசி பழ துண்டுகளை சேர்த்து பழத்தில் உள்ள ஈரம் வற்றும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
அடுத்து மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி பாதாம் பருப்பை போட்டு கொதிக்க விடவும். 2 ,3 நிமிடங்கள் கொதிக்க விடலாம். இதன் பிறகு பாதாம் பருப்பை இறக்கி அதில் உள்ள தோலை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாதாமை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
அரைத்த பாதாமை நாம் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள அன்னாசி பழத்துடன் சேர்த்து கலக்கவும். இப்போது அன்னாசி பழத்துடன் தேவையான அளவு சக்கரை, பால்கோவா சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும். இது நன்கு அல்வா பதத்திற்கு வந்ததும் கடைசியாக ஏலக்காய் பொடியை தூவவும். அதோடு இறக்கும் போதும் நீங்கள் பாதாம் நறுக்கி மேலே சேர்க்கலாம்.