அன்னாசி பழம் கொண்டு அல்வா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அன்னாச்சிப் பழத்துண்டுகள் - 1 கப்
பால் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 3/4 கப்
கேசரிப் பவுடர் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் அன்னாசிப்பழத் துண்டுகளை வேக வைத்து எடுக்கவும். பின்னர் ஆற விட்டு பால் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கிளறவும். இதில், அரைத்து வைத்துள்ள அன்னாசிப்பழ விழுது, ஒரு சிட்டிகை உப்பு, நெய், ஏலப்பொடி, கேசரிபவுடர், நெய்யில் வறுத்த திராட்டை ஆகியவை சேர்த்து நன்கு கிளறி விடவும். அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும். அவ்வளவு தான் தித்திப்பான அன்னாசிப் பழ அல்வா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“