உடலுக்கு உறுதி; எலும்புக்கு வலு... இந்தச் செடியில் இப்படி சட்னி செஞ்சு சாப்பிடுங்க: மருத்துவர் சிவராமன்
நம் உடலை உறுதியாக்கி எலும்புகளுக்கு வலு சேர்ப்பதற்கு பிரண்டை பெரிதும் உதவி செய்வதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, பிரண்டையில் சுவையான சட்னி செய்வது எப்படி என பார்க்கலாம்.
நம் உடலை உறுதியாக்கி எலும்புகளுக்கு வலு சேர்ப்பதற்கு பிரண்டை பெரிதும் உதவி செய்வதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, பிரண்டையில் சுவையான சட்னி செய்வது எப்படி என பார்க்கலாம்.
இயற்கையாக கிடைக்கும் அனைத்து பொருட்களில் நம் உடலுக்கு தேவையான ஏதோ ஒரு சத்து இருக்கிறது. ஆனால், இவை பார்ப்பதற்கு சாதாரணமாக இருப்பதால் அவற்றை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அந்த வகையில், பிரண்டையில் ஏராளமான சத்துகள் இருப்பதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
Advertisment
குறிப்பாக, நம் உடலை வலிமையாக்க, எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் அனைத்து ஊட்டச்சத்துகளும் இதில் இருக்கிறது. எனவே, பிரண்டையை சட்னியாக சமைத்து சாப்பிடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, சுவையான பிரண்டை சட்னி செய்யும் முறை குறித்து இதில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
பிரண்டை, எண்ணெய், உளுந்து, பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, வரமிளகாய்கள், புளி, கொத்தமல்லி, தேங்காய் மற்றும் உப்பு
Advertisment
Advertisements
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். இத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் உளுந்து, 5 பூண்டு, 10 சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, 2 வரமிளகாய்கள் மற்றும் கொஞ்சமாக புளி சேர்த்து வதக்க வேண்டும்.
அதன் பின்னர், சிறிதளவு கொத்தமல்லி, ஒரு கப் துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். தேங்காய் பொன்னிறமாக மாறியதும் இவை அனைத்தையும் மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும். இப்போது, அதே கடாயில் ஒரு கப் பிரண்டையை வதக்க வேண்டும். இதையடுத்து, வதக்கிய அனைத்து பொருட்களுடனும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
இறுதியாக, எண்ணெய், கறிவேப்பிலை மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை தாளித்து ஊற்றினால் சத்தான பிரண்டை சட்னி தயாராகி விடும்.
நன்றி - CookWithSugu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.