பிரண்டை கீரையில் ஏராளமான சத்துகள் உள்ளது. குறிப்பாக இது மூட்டு வலி, மூட்டு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும். சித்த மருத்துவர் சிவராமன் கூறுகையில், பிரண்டை கீரை சாப்பிட்டு வர எலும்பை வலுவாகும்.
பிரண்டை கீரை துவையல் செய்து சாப்பாட்டில் போட்டு சாப்பிட வேண்டும். பிரண்டை கீரைக்கு தமிழில் மற்றொரு பெயர் உண்டு வஜ்ரவல்லி என்று கூறப்படும்.
வஜ்ரம் என்றால் வலுவான, உறுதி என்று அர்த்தம். அதனால் இந்த கீரை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது எனக் அவர் கூறினார். இதில் துவையல் செய்வது மிகவும் எளிது. எப்போதும் துவையல் செய்வது போல் கூடுதலாக உளுந்தம்பருப்பு பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் சேர்த்து அரைத்து துவையல் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“