பிரண்டை குழம்பு: புதுமையான ரெசிபி ட்ரை செய்து பாருங்க

பிரண்டை குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

பிரண்டை குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pirandai Kuzhambu

Food

பிரண்டை குழம்பு ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

பிரண்டை – கால் கிலோ
துவரம் பருப்பு – 100 கிராம்
சிறிய வெங்காயம் – 4
தக்காளி – 1
பூண்டு – 4
புளி – சிறிதளவு
வெந்தயப்பொடி – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க

Advertisment
Advertisements

எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

முதலில் பிரண்டையைக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயப்பொடி, பிரண்டை துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். பிரண்டை நன்கு வதங்க வேண்டும். பிரண்டை நன்கு வதங்கவில்லை என்றால், சாப்பிடும் போது நாக்கு அரிக்கும். இவற்றை நன்கு வதங்கியதும், அதனுடன் தக்காளி, புளி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பின் இதை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். இப்போது மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த கடையலில் சேர்த்தால் பிரண்டை குழம்பு தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: