வயதாகும் போது எலும்பு தேய்மானம் காரணமாக உடலில் அதிகமான வலிகள் ஏற்படும். இதனை தடுப்பதற்கு உணவு முறை மாற்றத்தை மேற்கொள்ளலாம் என்று பரவலாக அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, பிரண்டை பொடியை தயாரித்து, அதனை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இதனை எவ்வாறு செய்யலாம் என்று இதில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
பிரண்டை,
நல்லெண்ணெய்,
கருப்பு உளுந்து,
கடலை பருப்பு,
வெள்ளை எள்,
சீரகம்,
மிளகு,
காய்ந்த பூண்டு,
கறிவேப்பிலை மற்றும்
பெருங்காயத் தூள்.
செய்முறை:
ஃப்ரெஷ்ஷான பிரண்டையை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் நார்ப்பகுதியை நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம். இதையடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.
இதில், வெட்டி வைத்திருக்கும் பிரண்டையை போட்டு மிதமான சூட்டில் வதக்க வேண்டும். இதனிடையே, மற்றொரு கடாயில் கருப்பு உளுந்தை 5 நிமிடங்களுக்கு வறுக்க வேண்டும். இதனை தனியாக எடுத்து விட்டு, அதே கடாயில் கடலை பருப்பு, வெள்ளை எள், சீரகம், மிளகு, காய்ந்த பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்க வேண்டும்.
பின்னர், இவை அனைத்தையும் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து நைஸாக அரைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான பிரண்டை பொடி தயாராக இருக்கும். இதனை தோசை, இட்லி போன்ற டிஃபன் வகைகள் மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றதாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.