தேவையான பொருட்கள்:
பிரண்டை
உப்பு
புளி
மிளகாய்த்தூள்
சின்ன வெங்காயம்
பூண்டு
வரமிளகாய்
பெருங்காயத்தூள்
கடுகு
தக்காளி
எண்ணெய்
செய்முறை:
பிரண்டையை எடுத்து தண்ணீரில் நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். இதனை சுத்தம் செய்யும்போது கைகளில் எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். பின்னர் பிரண்டையின் மீது இருக்கும் இலைகளை எடுத்து அதை உடைத்துக் கொள்ள வேண்டும்.
கணுப் பகுதிகளில் உடைக்கும் போது நார் வரும் அதை எடுத்து போட்டுட்டு மேலே சிறிது நறுக்கினாலும் மேலுள்ள நார் வரும் நார் அனைத்தையும் எடுத்து விட வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கல் உப்பு, சிறிது புளி சேர்த்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரண்டையை எண்ணெயில் சேர்த்து நன்கு வதக்கவும். பிரண்டையை வத்தல் பதத்திற்கு வதக்க வேண்டும். பின்னர் வேறொரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு,வெங்காயம், வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வாழ்க்கையில் ஒரு முறையாவது இதை சாப்பிட்டே ஆகணும்!Adamant Creeper Chutney| Pirandai Chutney- Thuvayal
பின்னர் அதில் சிறிது புளி சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து அதில் பிரண்டையைப் போட்டு சிறிது நேரம் அப்படியே விட்டு ஆற வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனை தாளிக்க வேண்டும். அதற்கு எண்ணெய், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து அதில் அரைத்து வைத்துள்ள பிரண்டை துவையலையும் சேர்த்து கிளறி விடவும். அதில் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை கிளறி விட வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் இறக்கி விடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“