முட்டி வலி எட்டிக் கூட பார்க்காது... வெறும் கஞ்சியுடன் இந்த துவையல் செஞ்சு சாப்பிடுங்க: செஃப் வெங்கடேஷ் பட் டிப்ஸ்
மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை துவையல் எவ்வாறு செய்யலாம் என்று சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். குறிப்பாக, முட்டி வலி போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் பிரண்டை துவையலுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை துவையல் எவ்வாறு செய்யலாம் என்று சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். குறிப்பாக, முட்டி வலி போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் பிரண்டை துவையலுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
உணவு என்பது சுவையுடன் சேர்த்து சத்து நிறைந்ததாகவும் இருப்பது அவசியம். அதனடிப்படையில், முட்டி வலி போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட பிரண்டையில் இருந்து எவ்வாறு சுவையான துவையல் தயாரிக்கலாம் என்று செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பிரண்டை - 100 கிராம்
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி,
Advertisment
Advertisements
காய்ந்த மிளகாய் - 10,
உளுத்தம் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி,
பூண்டு,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 2,
புளி - 25 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப,
துருவிய தேங்காய் - அரை கப்,
கொத்தமல்லி - 1 கைப்பிடி,
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி,
கடுகு - அரை தேக்கரண்டி மற்றும்
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில், பிரண்டையை நன்கு சுத்தம் செய்வது அவசியம். அதன் நார்கள் மற்றும் மேல் தோலை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிரண்டையை சுத்தம் செய்யும் போது, கைகளில் எண்ணெய் தடவிக் கொள்வது அரிப்பைத் தவிர்க்க உதவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து அதனை சூடாக்கி, அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். அதே கடாயில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இதனுடன் சுத்தம் செய்து நறுக்கி வைத்த பிரண்டையை சேர்த்து, பிரண்டையின் நிறம் மாறி, அதன் கசப்புத் தன்மை குறையும் வரை நன்கு வதக்கவும். இது துவையலுக்கு சரியான சுவையைக் கொடுக்கும். பிரண்டை வதங்கியதும், தக்காளி, கருப்பு எள், புளி, உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும். இதன் பின்னர் புளி கரைசலை சேர்க்கலாம்.
இனி, அடுப்பை அணைத்து துருவிய தேங்காய், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு ஆறவிடவும். இது ஆறியதும், அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து கெட்டியான துவையலாக அரைத்தெடுக்கவும். இப்போது, ஒரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விடவும். கடுகு பொரிந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதை அரைத்து வைத்த துவையலில் ஊற்றவும். இவ்வாறு செய்தால் சுவையான பிரண்டை துவையல் தயாராகி விடும். இதனை கஞ்சி போன்ற அனைத்து உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.